Main Menu

“சஜித்தே தமிழர்களுக்கு நியாயமான தீர்வளிப்பார்”: திஸ்ஸ செவ்வி

ரணசிங்க பிரேமதாஸ ஜனாதிபதியாகியதன் பின்னர் கட்சித் தலைமை பதவியை ஏற்பதற்கு ஜே.ஆரின் அரசியல் முதிர்ச்சியே காரணம்

பிரிக்­கப்­ப­டாத நாட்டில் 13ஆவது திருத்­தச்­சட்­டத்­தினை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தோடு வடக்கு கிழக்கில் உள்ள பிரச்­சி­னை­க­ளுக்கு நியா­ய­மான தீர்­வினை சஜித் பிரே­ம­தா­ஸவே வழங்­குவார் என்று அவரின் தேர்தல் பிர­தான செயற்­பாட்­ட­தி­கா­ரியும், ஐ.தே.கவின் முன்னாள் பொதுச்­செ­ய­லா­ள­ரு­மான திஸ்ஸ அத்­த­நா­யக்க வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய செவ்­வியில் குறிப்­பிட்டார். அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு,

கேள்வி:- ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ஸவின் அழைப்­பினை ஏற்­றுக்­கொண்ட உங்­களின் மீள் ­வ­ருகை மற்றும் செயற்­பா­டுகள் பற்றி கூறுங்கள்?

பதில்:- ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாஸ, என்னை தம்­முடன் இணைந்து பய­ணிக்க வேண்டும் என்றும் ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்­றி­பெ­று­வ­தற்கு என்­னு­டைய பங்­க­ளிப்பு அவ­சியம் என்றும் கூறி எனக்­கான  அழைப்­பினை பகி­ரங்­க­மா­கவே விடுத்­தி­ருந்தார். செயற்­பாட்டு அர­சி­ய­லி­லி­ருந்து தற்­கா­லி­க­மாக ஒதுங்­கி­யி­ருந்த நான் அவ­ரது அழைப்­பினை ஏற்­றுக்­கொண்டேன். தற்­போது ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ஸவின் தேர்தல் பணி­களை முன்­னெ­டுக்கும் பிர­தான செயற்­பாட்­ட­தி­கா­ரி­யாக இருக்­கின்றேன்.

கேள்வி:- ஐக்­கிய தேசியக் கட்­சியின் செய­லா­ள­ராக இருந்த நீங்கள் 2015இல் திடீ­ரென ராஜ­பக் ஷ தரப்­பி­ன­ருடன் இணைந்­து­கொள்ளும் முடி­வினை எடுத்­த­மைக்­கான காரணம் என்ன?

பதில்:- 2015ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் ஐ.தே.கவின் தலை­வரை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றக்க வேண்டும் என்ற நிலைப்­பாட்­டி­னையே கொண்­டி­ருந்தேன். செய­லா­ள­ராக இருந்­தாலும் என்­னு­டைய நிலைப்­பாட்­டினை செயற்­பாட்டு ரீதி­யாக முன்­னெ­டுப்­ப­தற்கு கட்­சி­யி­லி­ருந்து சில தரப்­புக்கள் இட­ம­ளித்­தி­ருக்­க­வில்லை. 1992ஆம் ஆண்­டுக்குப் பின்னர் எமது கட்­சி­யி­லி­ருந்து ஜனா­தி­பதி வேட்­பாளர் நிறுத்­தப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்பு கிடைத்­தி­ருக்­க­ வில்லை.

ஐந்து தட­வைகள் ஜனா­தி­பதி வேட்­பா­ளரை நிய­மிப்­ப­தற்­கான சந்­தர்ப்­பங்கள் கிடைத்­தி­ருந்­த­போதும் அவை கைந­ழுவவிடப்­பட்­டி­ருந்த நிலையில் 2015இல் ஜனா­தி­பதி வேட்­பா­ளரை நிய­மிப்­ப­தற்­கான பொறி­மு­றை­களை நாம் மேற்­கொண்­டி­ருந்தோம். எனினும் வெளி­யி­லி­ருந்து வேட்­பா­ளரை தெரிவு செய்து எமது ஆத­ரவை வழங்­கு­மாறு கோரப்­பட்­டது. அதற்­கான இணக்­கப்­பாட்­டினை என்னால் வழங்க முடி­யாது என்று கூறி­யி­ருந்தேன்.

மூன்று, நான்கு வரு­டங்­க­ளுக்கும் அதி­க­மாக ஒரு­வார்த்தை கூட பகிர்ந்­து­கொள்­ளா­தி­ருந்த ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வையும், சஜித் பிரே­ம­தா­ஸ­வையும் 2014ஆம் ஆண்டு செப்­டெம்பர் 6ஆம் திகதி பச­றையில் நடை­பெற்ற கூட்­டத்தில் இரு­வ­ரையும் ஒரே மேடையில் ஏற்­றி­யி­ருந்தேன். அது­மட்­டு­மன்றி சஜித் பிரே­ம­தா­ஸவை உப­த­லை­வ­ராக்­கு­வ­தற்­கான முயற்­சி­க­ளையும் எடுத்தேன்.

அதற்கு கட்­சி­யி­லி­ருந்த சிலர் எதிர்ப்­புக்­களை வெளி­யிட்­டி­ருந்­தனர். அவற்­றை­யெல்லாம் கடந்து சஜித்தை உப­த­லைவர் பத­விக்கு நிய­மிப்­ப­தற்­கான தீர்­மா­னத்­தினை எடுக்கும் வகையில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு உந்­துதல் அளித்தேன். இதனால் கட்­சி­யினுள் சில தரப்­புக்­க­ளுடன் முரண்­பா­டுகள் எழுந்­தி­ருந்­தன. இந்த நிலை­மை­களால் தான் அன்று வெளி­யேற வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது.

கேள்வி:- அவ்­வாறு வெளி­யே­றி­னாலும், உங்­க­ளு­டைய கொள்­கைக்கு நேரெ­தி­ரான கொள்­கையைக் கொண்­டி­ருக்கும் ராஜ­பக் ஷ தரப்­பி­ன­ருடன் இணை­யவேண்டும் என்று தீர்­மா­னித்ததேன்?

பதில்:- நான் ராஜ­பக் ஷ குடும்­பத்­துடன் இணை­ய­வில்லை. எமது கட்­சியின் வாக்­கு­களைப் பயன்­ப­டுத்தி ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் செய­லா­ளரை ஜனா­தி­ப­தி­யாக்கும் தீர்­மா­னத்­திற்கு எதி­ராக மிகுந்த மன உளைச்­ச­லுடன் எடுத்த முடிவே அது­வாகும். கொள்­கை­ய­ளவில் எடுக்­கப்­பட்ட அந்த முடிவை நான் எடுத்­தி­ருக்­க­வில்லை.

கேள்வி:- தற்­போது ராஜ­ப­க் ஷ ­வி­ன­ருக்கு எதி­ராக தேர்தல் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்கும் உங்கள் முன்னாலுள்ள சவால்கள் என்ன?

பதில்:- இந்த ஜனா­தி­பதித் தேர்­த­லா­னது ஐக்­கி­ய ­தே­சியக் கட்­சிக்கு வெற்­றி­யான ஜனா­தி­பதித் தேர்­த­லாகும். சஜித் பிரே­ம­தா­ஸவைப் பொறுத்­த­ வ­ரையில் அனைத்து மட்­டங்­க­ளிலும் அவ­ருக்கு ஆத­ரவு காணப்­ப­டு­கின்­றது. ஆகவே புதிய வாக்­க­ாளர்­களின் ஆத­ர­வினைப் பெற்­றுக்­கொண்டு முன்­னோக்கிச் செல்ல வேண்­டி­யதே அவர் முன்னாலுள்ள பணி­யாக இருக்­கின்­றது. ஆகவே ராஜ­பக் ஷ குடும்­பத்தால் எமக்கு எவ்­வி­த­மான சவால்­களும் ஏற்­ப­டப்­போ­வ­தில்லை. முழு இலங்­கையும் புதிய தலை­மைத்­து­வத்­தி­னையே விரும்­பு­கின்­றது. மீண்டும் குடும்ப ஆட்­சி­யொன்று இந்த நாட்டில் உரு­வா­கு­வதை எந்­த­வொரு நபரும் விரும்­பவில்லை. அது­மட்­டு­மன்றி தற்­போதே சஜித்தின் வெற்­றிக்­காக முழு நாடுமே ஒன்­றி­ணைந்­துள்­ளது.

கேள்வி:- மீள்­வ­ரு­கையின் பின்னர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வு­ட­னான உறவு எப்­ப­டி­யி­ருக்­கின்­றது?

பதில்:- பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் எனக்கும் இடை­யி­லான நல்­லு­ற­வுகள் முழு­மை­யாக முறிந்து விட­வில்லை. வேட்­பாளர் நிய­ம­னத்தில் இரு­வ­ருக்கும் இடையில் பரஸ்­பர கருத்து வேறு­பா­டுகள் மட்­டுமே ஏற்­பட்­டி­ருந்­தன. தற்­போது எம் இரு­வ­ரி­டை­யேயும் நட்­பு­ற­வுகள் உள்­ளன.

கேள்வி:- பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வ­தற்கு விருப்­பினை வெளி­யிட்­டி­ருந்­த­போதும் அதற்கு வாய்ப்­ப­ளிக்­கப்­பட்­டி­ருக்­கா­மையை எப்­படி பார்க்­கின்­றீர்கள்?

பதில்:- சஜித் பிரே­ம­தாஸ போட்­டி­யிட வேண்­டு­மென கீழ் மட்­டத்­தி­லி­ருந்து கோரிக்­கைகள் எழுந்­தன. மாவட்ட ரீதி­யாக கூட்­டங்கள் நடத்­தப்­பட்­டன. இவ்­வாறு அனைத்து தரப்­பின­ரதும் முன்­மொ­ழி­வுகள் மற்றும் கோரிக்­கை­களைக் கருத்­திற்­கொண்டே அவர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கி­யுள்ளார். பல்­வேறு தரப்­பி­னரும் வேறு­பட்ட நிலைப்­பா­டு­களை கொண்­டிந்­தாலும் கட்­சி­யினுள் இரு­வ­ருக்கும் இடையில் போட்­டிகள் காணப்­பட்­டி­ருந்­தாலும் ஜன­நா­ய­கத்தின் அடிப்­ப­டை­யி­லேயே தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் எமக்கு எதி­ரான தரப்­பி­னரை பாருங்கள், அவர்­களின் மத்­தி­ய­குழு கூடியா வேட்­பா­ளரை தெரிவு செய்­தது. குடும்ப உறுப்­பி­னர்கள் ஒன்று கூடியே வேட்­பா­ளரை இறுதி செய்­தார்கள். இங்கு தான் நாம் வேறு­பட்டு நிற்­கின்றோம்.

கேள்வி:- சஜித் பிரே­ம­தா­ஸ­வினை கள­மி­றக்­கு­வ­தற்கு ஐ.தே.கவினுள் எதிர்ப்­புக்கள் ஏற்­பட்­டி­ருந்த நிலையில் தேர்­தலில் அவை பிர­தி­ப­லிப்­ப­தற்கு வாய்ப்­புக்கள் உண்­டல்­லவா?

புதில்:- வேட்­பா­ளரை இறுதி செய்­வ­தற்கு முன்­ன­தாக ரணில், கரு, சஜித் என மூன்று தலை­வர்கள் தொடர்பில் எதிர்­பார்ப்­புக்கள் இருந்­தன. கட்சி மூன்று அணி­க­ளாக பிளவுபட்­டி­ருந்­தன. ஆனால் வேட்­பா­ள­ராக சஜித் பெய­ரி­டப்­பட்டு இறுதித் தீர்­மானம் எடுத்­ததன் பின்னர் அதனை யாரும் எதிர்க்­க­வில்லை. அனைத்து உறுப்­பி­னர்­களும் சஜித் வெற்றி பெறு­வ­தற்­காக ஒருங்­கி­ணைந்து செயற்­ப­டு­கின்­றனர்.

கேள்வி:- ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்ட பின்­னரே ரண­சிங்க பிரே­ம­தாஸ கட்­சித்­த­லை­மையை ஏற்­றி­ருந்தார். அவர் கட்சித் தலை­மை­யேற்கும் இந்­நி­கழ்வில் தாங்­களும் பங்­கேற்­றி­ருந்த நிலையில் அந்த அனு­ப­வத்தை பற்றி கூறுங்கள்?

பதில்:- ரண­சிங்க பிரே­ம­தாஸ இந்த நாட்டின் புகழ்­பூத்த பிர­த­ம­ராவார். இந்த நாட்டில் ஜே.ஆர்- – பிரே­ம­தாஸ இணை தான் அதி­சி­றந்த அர­சியல் இணை­யாக காணப்­ப­டு­கின்­றது. இக்­கா­லப்­ப­கு­தியில் தான் நாட்டின் முக்­கிய பல விட­யங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. பிரே­ம­தாஸ ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­பட்­டதன் பின்­னரே கட்சி தலை­மையைப் பொறுப்­பேற்­றி­ருந்தார். பிரே­ம­தாஸ அவ்­வாறு கட்­சித் ­த­லை­மை­யையும் பொறுப்­பேற்று அர­சியல் செயற்­பாட்­டினை முன்­னெ­டுப்­ப­தற்கு ஜே.ஆரின் அர­சியல் முதிர்ச்­சியே கார­ண­மாக இருந்­தது. அத­னா­லேயே கட்­சியின் அதி­கா­ரங்கள் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டி­ருந்­தன.

கேள்வி:- சஜித் பிரே­ம­தாஸ தற்­போது கட்­சியின் உப­த­லை­வ­ராக இருக்­கின்ற நிலையில் எதிர்­கா­லத்தில் அவ­ரு­டைய தந்­தை­போன்று கட்­சியின் தலை­மையை ஏற்­பாரா?

பதில்:- தற்­போது ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்றி பெறு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அதன் பின்­னரே பிர­தமர் யார், அமைச்­சர்கள் யார், கட்­சித்­த­லைவர் யார் என்­பது பற்றி சிந்­திக்­கலாம். ஜனா­தி­ப­தி­யாக சஜித் பிரே­ம­தாஸ பத­வி­யேற்ற பின்னர் கட்­சியின் செயற்­கு­ழுவும் அவரும் அது­பற்றி தீர்­மா­னிக்க முடியும். அது­பற்றி தற்­போது கலந்­து­ரை­யாட வேண்­டி­ய­தில்லை. பிர­த­மரின் பத­விக்­காலம் அடுத்த ஆண்டு ஓகஸ்ட் வரை உள்­ளது. அதே­நேரம் மார்ச் மாதத்­திற்கு பின்னர் பாரா­ளு­மன்­றத்­தினைக் கலைக்­கவும் முடியும். புதிய ஜனா­தி­பதி பதவி ஏற்ற பின்னர் பிர­தமர், அமைச்­ச­ர­வையை நிய­மிப்­பது சம்­பி­ர­தா­ய­மான விட­ய­மாகும். அதில் எவ்­வி­த­மான  பிரச்­சி­னை­களும் இல்லை. அத்­துடன் தனது குடும்ப உறுப்­பினர் ஒரு­வரை சஜித் பிர­த­ம­ராக நிய­மிக்க மாட்டார் என்­பதை என்னால் உறு­தி­யாக கூற முடியும்.

கேள்வி:- 25வரு­டங்கள் கட்­சித் ­த­லை­மையும் ஆசி­யப்­பி­ராந்­தி­யத்தில் மதிப்பு மிக்க அர­சியல் தலை­வ­ராக இருக்கும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட இறு­தி­யாக ஒரு சந்­தர்ப்­பத்­தினை வழங்­கி­யி­ருக்­க­லா­மல்­லவா?

பதில்:- அவர் இரண்டு தட­வைகள் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட்­ட­போதும் வெற்­றி­பெற்­றி­ருக்­க­வில்லை. இதனால் கட்­சியும் பின்­னிலை அடைந்­தது. கட்­சியின் அனைத்து தரப்­பி­னரும் மாற்­றத்­தினை விரும்­பியே இருந்­தார்கள். அதுவே யதார்த்­த­மா­கவும் காணப்­பட்­டது. ரணில் விக்­கி­ர­ம­சிங்க மிகவும் திற­மை­வாய்ந்த புலமை மிக்­கவர் என்­பதில் எவ்­வி­த­மான மாற்­றுக்­க­ருத்­திற்கும் இட­மில்லை. அத­னா­லேயே நான்கு தட­வைகள் அவர் பிர­தமர் பத­வியை வகித்­துள்ளார்.

கேள்வி:- தமிழர் தரப்­புக்கு வாக்­கு­று­திகள் பல கடந்த ஆட்­சிக்­கா­லத்­திலும் வழங்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­காத நிலையில் எந்த அடிப்­ப­டையில் மீண்டும் நம்­பிக்கை வைக்க முடியும் என்று கூறு­வீர்கள்?

பதில்:- சஜித் பிரே­ம­தாஸ சம்­பி­ர­தாய அரசியல்வாதி அல்ல. இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களினதும் பிரச்சினைகளை நன்கு அறிந்தவராக இருக்கின்றார். அதுமட்டுமன்றி தற்போது வீடமைப்பு அமைச்சராக இருக்கும் அவர் தனது அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் நூற்றுக்கு 40சதவீதத்தினை வடக்கு கிழக்கிற்கே வழங்கியுள்ளார். கொழும்பில் உள்ள தமிழ்த் தலைவர்கள் அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக பேசுகின்றார்களே தவிர, வடக்கு மக்கள் தமக்கு அடிப்படை விடயங்களை, வேலைவாய்ப்புக்களை, அபிவிருத்தியை ஏற்படுத்தி தருமாறே கோருகின்றார்கள்.

இவற்றை ஆரம்பத்திலேயே செய்திருந்தால் தனி நாடு கோரி அவர்கள் போராடியிருக்கமாட்டார்கள். இவ்வளவு தூரம் அனர்த்தங்களும் இடம்பெற்றிருக்காது. ஆகவே சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாகியதும் மக்கள் கவலை கொண்டிருக்கும் விடயங்களுக்கு முதன்மை தானம் அளித்து தீர்வுகளை வழங்குவார்.

பிரிக்கப்படாத நாட்டில் 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதோடு, புதிய அரசியலமைப்பு, பாராளுமன்ற முறைமை போன்ற விடயதானங்களில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விடயங்களை கலந்துரையாடி தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு சஜித் இணங்கியுள்ளார். வடக்கு கிழக்கில் உள்ள பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வினை சஜித் பிரேமதாஸ வழங்குவார் என்று உறுதியளிக்கின்றேன்.

நேர்காணல் : ஆர்.ராம்

பகிரவும்...