சசிகலாவின் விடுதலை அ.தி.மு.க.வில் தாக்கத்தை ஏற்படுத்தாது – ஜெயக்குமார்
சசிகலாவின் விடுதலை அ.தி.மு.க.வில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் பல கட்சிகள் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளதாகவும் கூட்டணியில் இருந்து யாரும் வெளியேற வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் சசிகலா விடுதலை குறித்த வினாவுக்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவை உயர்த்திக்காட்டுவதே ஊடகங்கள்தான் எனவும் தெரிவித்துள்ளார்.