Main Menu

சசிகலாவின் கதாபாத்திரத்தில் நடிக்கும் தேசிய விருது பெற்ற நடிகை?

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை மூன்று இயக்குனர்கள் ஒரே நேரத்தில் இயக்கி வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குனர் A.L.விஜய் இயக்கும் திரைப்படத்திற்கு “தலைவி” எனப் பெயரிடப்பட்டுள்ளதுடன், அந்த திரைப்படத்தில் நடிகை கங்கனா ரனாவத் நாயகியாக நடித்து வருகிறார்.

அத்துடன் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில், அரவிந்சாமி நடித்து வருகிறார். இந்த தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் தற்போது சசிகலாவாக நடிப்பவர் குறித்த தகவல்வெளியாகியுள்ளது.

பருத்திவீரன் திரைப்படத்திற்காக தேசிய விருதினை பெற்ற நடிகை பிரியா மணி சசிகலா வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...
0Shares