சசிகலாவிடம் வருமான வரித்துறையினர் விசாரணை

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தவுள்ளனர்.

வருமானவரித்துறையினர் நாளையும் நாளை மறுதினமும் பெங்களூர் சென்று சிசிகலாவிடம் விசாரணை நடத்தவுள்ளதாக கூறப்படுகின்றது.

தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்னர் சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையினை நடத்தினர்.

இதன்போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதன் தொடர்ச்சியாக சிறையிருக்கும் சசிகாலாவிடம் விசாரணை நடத்த வருமானவரித்துறையினர் தீர்மானித்தனர்.

இதற்காக பெங்களூர் பரப்பனா அக்ரஹாரா சிறை நிர்வாகத்திடம் அனுமதி பெற்ற வருமானவரித்துறையினர் நாளையும் நாளை மறுதினமும் விசாரணை நடத்தவுள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !