சக்தி வாய்ந்த சூறாவளி: கியூப தலைநகரில் நால்வர் உயிரிழப்பு

கியூபாவின் தலைநகரான ஹவானாவில் வீசிய சக்திவாய்ந்த சூறாவளியில் சிக்கி நால்வர் உயிரிழந்ததுடன், 195 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கடந்த ஒரு தசாப்த காலத்தில் முதல் முறையாக நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இரவு சக்திவாய்ந்த சூறாவளி தலைநகரை தாக்கியுள்ளது.

சூறாவளியில் பாதிக்கப்பட்டவர்களின் விபரம் உடனடியாக வெளியிடப்படாத நிலையில், தற்போது அது குறித்த தகவல்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

சுமார் 100 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய பலத்த காற்று காரணமாக கட்டிடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. சூறாவளியை தொடர்ந்து ஏற்பட்ட மழையினால் ஹவானாவின் தாழ் நிலங்களில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கியூப ஜனாதிபதி சூறாவளியின் பாதிப்புகளை நேரில் ஆராய்ந்ததுடன், மீட்பு பணியாளர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.

இதனை தொடர்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பகிர்ந்த ஜனாதிபதி, சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்கள் கடுமையானது எனக் குறிப்பிட்டுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !