கோலிவுட் திரையுலகில் ஒரு புதிய முயற்சி!
ஒரு திரைப்படம் வெற்றி அடைந்தால் அந்த படத்தின் தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர், டெக்னீஷியன் உட்பட அனைவரும் இலாபம் அடையும் அதேவேளை அந்த திரைப்படம் தோல்வியடைந்தால் படத்தின் தயாரிப்பாளர் மட்டுமே நஷ்டத்தை எதிர்கொள்கிறார்.
இந்த நிலையை மாற்றும் வகையில் கோலிவுட் திரையுலகில் புதிய முயற்சியாக ஒரு திரைப்படம் எடுக்கப்படவுள்ளது.
இந்த திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி செளத்ரி மற்றும் திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் ஆகியோர் எடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
விஜய் சேதுபதி, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள இந்த திரைப்படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.