கோர்ஸ் தீவிற்குச் செல்பவர்களுக்கு கட்டாய கொரோனாப் பரிசோதனை!
பிரான்ஸ் அரசாங்கத்தின் பகுதியான கோர்ஸ் தீவிற்குச் செல்பவர்கள் கட்டாயம் கொரோனாப் பரிசோதனை செய்ய வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்மறைப் பெறுபேறு இருந்தால் மட்டுமே தீவிற்குச் பயணிக்க அனுமதி அளிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் அல்லது புதவருடத்திற்காக மட்டுமல்ல, எதிர்வரும் டிசம்பர் 19ஆம் திகதியிலிருந்து, 2021 ஜனவரி 8ஆம் திகதி வரை, இந்தக் கட்டாயக் கட்டுப்பாடு நடைமுறையில் இருக்கும் என கோர்ஸ தீவின் பிராந்திய சுகாதார நிறுவனமான ஏ.ஆர்.எஸ். மற்றும் கோர்ஸ் தீவின் மாகாணக் கட்டுப்பாட்டு நிர்வாகம் ஆகியவை அறிவித்துள்ளது.
11 வயதிற்கு மேற்பட்ட அனைவரிற்கும் இந்தக் கட்டுப்பாடு பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு இந்த விடுமுறைக் காலங்களில் 50.000இற்கும் அதிகமானவர்களை கோர்ஸ் தீவு எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.