Main Menu

கோத்­தாபய சஜித்­துடன் பகி­ரங்க விவா­தத்­துக்கு வரவேண்டும் – மங்கள

பொரு­ளா­தார அறி­வின்­மை­யி­னா­லேயே  ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் வரி­களை குறைப்­ப­தா­கவும் நீக்­கு­வ­தா­கவும் மக்­க­ளுக்கு வாக்­கு­று­தி­களை வழங்கி வரு­கிறார்.

அவரின் இவ்­வா­றான கருத்­துக்கள் எதிர்காலத்தில் நாட்டின் பொரு­ளா­தார வீழ்ச்­சிக்கு வழி­வ­குக்கும். வரி­களை நீக்­கினால் அதனால் அர­சாங்­கத்தின் வரு­மா­னத்தில் ஏற்­படும் வீழ்ச்­சிக்­கான நிதியை எங்­கி­ருந்து பெறுவார்? இதை கோத்தா விளக்க வேண்டும். ஊட­கங்­களின் கேள்­வி­களில் இருந்து தப்­பித்து செல்­லாமல்  புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­வுடன்  நேரடி பொரு­ளா­தார விவா­தத்­துக்கு  வர வேண்டும் என்று நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீர அழைப்பு விடுத்­துள்ளார்.

நிதி அமைச்சில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் இதனை அவர் குறிப்­பிட்டார்.

  அவர்  அங்கு  மேலும்  குறிப்­பி­டு­கையில்,

பெறு­மதிசேர் வரியை 8 வீதத்தால் குறைக்க போவ­தா­கவும் சம்­பள கொடுப்­ப­ன­வு­க­ளுடன் தொடர்­பு­டைய வரி, சகல விவ­சாய வரி, வர்த்­தக சமூ­கத்­தி­ன­ருக்­கான வரி, தொலை­பேசி வரி ஆகிய வரி­களை நீக்கப் போவ­தாக பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­தபாய தெரி­வித்­தி­ருக்­கிறார். பொரு­ளா­தாரம் தொடர்பில் அறி­யா­மை­யி­னா­லேயே இவ்­வா­றான கருத்­துக்­களை அவர் வெளி­யிட்டு வரு­கிறார்.

எது எவ்­வா­றிருந்­தாலும் இந்த யோச­னையை இவ்­வாறே நடை­மு­றைப்­ப­டுத்­தினால் முழு நாடும் வீழ்ச்­சியை சந்­திக்கும். நோயா­ளி­ ஒருவர் அதி­தீ­விர சிகிச்சைப் பிரி­வி­லி­ருந்து  சிகிச்சை பெற்று படிப்­ப­டி­யாக குண­ம­டைந்து இயல்பு வாழ்க்­கைக்கு திரும்பி வரு­கையில், மீண்டும் நோயா­ளி­யாக்­கு­வது போன்றே கோத்தாவின் இந்த யோச­னைகள் அமைந்­துள்­ளன.  வட் வரி­யி­னூ­டாக 2019 ஆம் ஆண்டு 530 பில்­லியன் ரூபா வரவை பெற்­றுக்­கொள்ளக் கூடி­ய­தாக  இருந்­தது. கோத்தா கூறு­வது போன்று  15 வீதத்தில் உள்­ள­ பெ­று­மதி சேர் வரியை 8 வீதத்தால் குறைத்தால் ஒரு­வ­ரு­டத்தில் ஒவ்­வொரு நாளும் 350 பில்­லியன் வீழ்ச்­சியை சந்­திக்க நேரிடும்.

இந்த அர­சாங்­கத்தை குறை­கூறும் மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சி­கா­லத்தில் தான்  சகல வரி­களும் அதி­க­ரிக்­கப்­பட்­டி­ருந்­தன. 2006 ஆம் ஆண்டு 20 வீத­மாக பெறு­மதி சேர் வரி அதி­க­ரிக்­கப்­பட்­டது மாத்­திரமல்­லாமல்,  சகல அத்­தி­யாவ­சியப்  பொருட்­க­ளுக்கும் அந்த வரி அற­வி­டப்­பட்­டது.  அதன் தொடர்ச்­சி­யாக தேர்­தலை மைய­மாக கொண்டு 2014 ஆம் ஆண்டு அந்த பெறு­மதி சேர் வரி 11 வீத­மாக குறைக்­கப்­பட்­டது. நாங்கள்  ஆட்­சியை பொறுப்­பேற்­றதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு  அந்த பெறு­மதி சேர் வரியை 15 வீத­மாக  வரை­ய­றுத்தோம்.

ஆனால் தற்­போது அடிப்­படை பாவனை பொருட்­க­ளுக்கு இந்த பெறு­மதி சேர் வரி அற­வி­டப்­ப­டு­வ­தில்லை.  

மறு­புறம் சம்­பள கொடுப்­ப­ன­வு­க­ளுக்­கான வரியை நீக்­கப்­போ­வ­தா­கவும் அவர் அறி­வித்­தி­ருக்­கிறார். 

எதன் அடிப்­ப­டையில் இந்த யோச­னையை முன்­வைத்தார் என்­பது எனக்கு புரியவில்லை. எது எவ்­வா­றா­யினும்  கொடுப்­ப­ன­வு­க­ளுக்­கான  வரி  அற­வீட்டு தொகையை  62500 ரூபா­வி­லி­ருந்து  100,000 ரூபா­வாக இந்த அர­சாங்­கமே அதி­க­ரித்­தது. மஹிந்­தவின் ஆட்­சியில் 62500 ரூபா கொடுப்­ப­ன­வு­களை பெற்ற  சக­ல­ரி­டமும் இந்த வரி அற­வி­டப்­பட்­டது.

பொய் செய்­தி­க­ளி­னூ­டாக மக்­களை ஏமாற்­று­வ­தற்கு இவர்கள் முயற்­சித்து வரு­கி­றார்கள். ஆகவே  அடுத்த வர­வு செ­லவு திட்­டத்தில் கொடுப்­ப­ன­வு­க­ளுக்­கான வரி அற­வீட்டு தொகையை 150,000 ரூபா­வாக அதி­க­ரிக்க எதிர்­பார்த்­துள்ளோம். 2019 ஆம் ஆண்டில் கொடுப்­ப­னவு வரி­யி­னூ­டாக  62 பில்­லியன் ரூபாவை  பெற்­றுக்­கொள்­கிறோம்.  ஆகவே ஒரு­புறம் பெறு­மதி சேர் வரி­யி­னு­டாக  530 பில்­லியன் ரூபாவை பெற்­றுக்­கொள்­கிறோம். அதற்­க­மைய  பெறு­மதி சேர் வரியின் வீதத்தை குறைத்தால் ஒரு­வ­ரு­டத்­துக்கு  450 415 பில்­லியன் ரூபா வரையில் வீழ்ச்­சியை சந்­திக்க நேரிடும்.

முன்­னெப்­போதும் இல்­லா­த­வாறு கடனை மீள் செலுத்தி வரு­கிறோம். இந்த வரு­டத்தில் மாத்­திரம் 747 பில்­லியன் ரூபா கடன் செலுத்­தி­யி­ருக்­கிறோம். ஆகவே அடுத்த­ வ­ரு­ட­மாகும் போது சகல கட­னையும் ட்ரில்­லியன் பெறு­ம­தியில் செலுத்த­ வேண்டியேற்­படும்.

 அதற்­க­மைய 2020 இல் 1.1 ட்ரில்­லியன் ரூபா கடன் செலுத்த வேண்டியேற்­படும். ஆயினும் எங்­களின் பொறுப்பை சரி­யாக செய்து வரு­கிறோம். சரி­யான சந்­த­ர்ப்­பத்தில் கடனை மீள் செலுத்­து­வ­தோடு மக்­க­ளுக்கு தேவை­யான நிவா­ர­ணங்­களை வழங்­குதல், அபி­வி­ருத்­திகள் என சகல விட­யங்­க­ளையும் முறை­யாக செய்­துள்ளோம்.

விவ­சா­யி­க­ளுக்கு தேவை­யான நிவா­ர­ணங்­க­ளையும் வழங்­கியே வரு­கிறோம்.  மறு­புறம் தொடர்­பாடல் வரியும் குறைக்கப்பட்டே இருக்கிறது.  இவ்வாறிருக்கையில், கோத்தபாயவின் இந்த அறிவித்தல்  இயல்பான செயற்பாடுகளுக்கு புறம்பானதாகும்.

ஆகவே தொடர்ந்து  பொய் கூறாமல் கோத்தபாய ராஜபக்ஷ எங்களின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடன் பொருளாதார நேரடி விவாதத்துக்கு வர வேண்டும். சஜித் எந்த பிரச்சினைகளிலிருந்தும் தப்பித்து செல்ல நினைப்பவர் அல்ல. ஊடகங்களுக்கு நேருக்கு நேர் பதிலளிக்கக் கூடியவர். ஆகவே அவருடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு கோத்தபாய வரவேண்டும் என்றார்.

பகிரவும்...