கோடநாடு விவகாரம்: ஆளுநரை சந்தித்திக்கின்றார் மு.க ஸ்டாலின்

கோடநாடு விவகாரம் தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) மாலை ஆளுநரை சந்தித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மனுவென்றை கையளிக்கவுள்ளார்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு கொள்ளை சம்பவமென்று நடைபெற்றது.

இதனை மறைக்கவே ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கனகராஜ் உள்ளிட்ட 5 பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதாக இந்தவழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவைச் சேர்ந்த கூலிப்படை தலைவன் ஷயான், மற்றும் மனோஜ், ‘தெகல்கா’ இணையதள புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆகியோர் கடந்த 11ஆம் திகதி டெல்லியில் வைத்து செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தனர்.

இதன்போது அவர்கள், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றஞ்சாட்டினர். கோடநாடு கொலை கொள்ளை சம்பவங்கள் தொடர்பான ஆவண படத்தையும் வெளியிட்டனர்.

இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்போது, தன் மீதான குற்றச்சாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறுத்துள்ளார்.

இந்த நிலையில், கோடநாடு விவகாரம் தொடர்பாக இன்று மாலை ஆளுநரை சந்தித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மனுவென்றை கையளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !