கொவிட்-19 நெருக்கடி: கருத்தடை செய்ய முடியாமல் தவிக்கும் பெண்கள்
தற்போது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதால் பல பெண்கள் கருத்தடை செய்ய முடியாமல் குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பிரித்தானியாவிலுள்ள அபார்ஷன் சப்போர்ட் நெட்வொர்க் என்ற அமைப்பின் தலைவர் மாரா கிளர்க் இதுகுறித்து கூறுகையில், “ஆரம்ப கட்டத்தில் கருவை கலைக்க தங்களது அமைப்பு பெண்களுக்கு தபால் மூலமாக மாத்திரைகளை அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார்.
எனினும், சரியாக வளர்ச்சி அடையாத சிசுவை சுமக்கும் தாய்மார்கள் கருத்தடை செய்ய முடியாமல் தவிக்கும் அவலமும் தற்போது ஏற்பட்டு வருகிறது.
கடந்த 2019-ஆம் ஆண்டு சர்வதேச அளவில் போலந்து நாட்டில் துவங்கப்பட்ட கருத்தடைக்கு உதவும் அமைப்பு இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் தங்களுக்கு 2,300 கருத்தடை விண்ணப்பங்கள் வந்துசேரும். தற்போது குறுகிய காலத்தில் இவர்களுக்கு தங்கள் அமைப்பு உதவ முடியாமல் தவிக்கிறது எனக் கூறியுள்ளது.
கருத்தடை பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் தற்போது அதிக முக்கியத்துவம் இல்லாத மருத்துவ சேவை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 27 லட்சம் கருத்தடைகள் செய்யப்பட வாய்ப்புள்ளது என்று மேரி ஸ்டாப் இன்டர்நேஷனல் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கூறியுள்ளது.