Main Menu

கொவிட்-19: ஜேர்மனியில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை நெருங்குகின்றது!

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை நெருங்குகின்றது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அங்கு ஒரு இலட்சத்து 99ஆயிரத்து 558பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர்.

உலகளவில் கொவிட் தொற்றினால் அதிகம் பாதிப்பை எதிர்கொண்ட இரண்டாவது நாடாக விளங்கும் ஜேர்மனியில், இதுவரை ஒன்பது ஆயிரத்து 130பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24மணித்தியாலத்தில் மட்டும், 390பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்ததோடு, 5பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், ஆறு ஆயிரத்து 458பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில் 278பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதுதவிர ஒரு இலட்சத்து 84ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.