கொழும்பு, வெள்ளவத்தை மயூராபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் புத்தசாசன அமைச்சர் வழிபாடு
கொழும்பு, வெள்ளவத்தை மயூராபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் பெரியசாமி சுந்தரலிங்கத்தின் அழைப்பின்பேரில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி, பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோர் நேற்று வியாழக்கிழமை (05) மாலை ஆலயத்துக்கு வருகைதந்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இவ்வழிபாடுகளில் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் பெரியசாமி சுந்தரலிங்கம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய.அநிருத்தனன் மற்றும் அறங்காலவர் சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
பகிரவும்...