கொல்லப்பட்ட பயங்கரவாதி தயேஸின் வீரன் – பயங்கரவாதிகள் அறிவிப்பு! தாக்குதலிற்கும் உரிமைகோரல்!

இஸ்லாமியேதசப் பயங்கரவாதிகளான தயேஸ் (Daesh), ஸ்ரார்ஸ்பேர்க்கில் பயங்கரவாதத் தாக்குதல் நடாத்திய Chériff Chekatt  தங்களது «படைவீரன்» எனப் பிரகடணப்படுத்தி உள்ளனர். இவர்களது பிரச்சாரப் பிரிவான Amaq சற்று முன்னதாக இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

ஏற்கனவே தீவிரவாத இஸ்லாமிய அமைப்புகளுடன் இருந்த தொடர்பினால், இவன் மீது உள்ளகப் புலானாய்வுத்துறை ‘S’ கண்காணிப்பை மேற்கொண்டிருந்தது.

இன்று,  சற்று முன்னதாக, பயங்கரவாதி காவற்துறையினரின் சிறப்புப் பிரிவினால் சுட்டுக் கொல்லப்பட்டுச் சற்று நேரத்தில், செவ்வாய்க்கிழமையின் பயங்கரவாதத் தாக்குதலிற்கு தயேஸ் உரிமை கோரியுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !