கொரோனா வைரஸ் : 85 ரயில்களை இரத்து செய்தது அரசு!
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் உள்ள முக்கிய வழித்தடங்களில் 85 ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ரயில்வே, மத்திய மற்றும் கிழக்கு ரயில்வே மண்டலங்களின் கீழ் இயக்கப்படும் ரயில்கள் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இரத்தான ரயில்களின் பட்டியலில் மும்பை, டெல்லி, நிஜாமுதீன், ராஜ்தானி எக்ஸ்பிரஸ், மும்பை – ஹவுரா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் 31ம் திகதி வரை இந்த அறிவிப்பு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரயில் நிலையங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை கட்டுப்படுத்த பிளாட்பார்ம் டிக்கெட் 10 ரூபாயில் இருந்து 50ஆக விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.