Main Menu

கொரோனா வைரஸ்: பதினொராயிரம் பேர் மோசமான நிலையில் உள்ளதாக தகவல்!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால், 11 ஆயிரத்து 947 பேர் மோசமான நிலையில் உள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிகப்பட்சமாக ஹூபெய் மாகாணத்தில் 59 ஆயிரத்து 989 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீனா முழுவதும் வைரஸ் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 12 ஆயிரத்து 552 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

மனிதர்கள் மூலம் பரவும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் நெருங்கிய தொடர்பில் இருந்த 1 லட்சத்து 41 ஆயிரம் பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில், கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 1,868 ஆக உயர்ந்துள்ளது. அத்தோடு, இதுவரை, 72 ஆயிரத்து, 436 பேருக்கு இதன் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சிகிச்சை பெறுபவர்களில் 1,097 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.