கொரோனா வைரஸ் தொற்றினால் கொழும்பில் மாத்திரம் 81பேர் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் தொற்றினால் கொழும்பில் மாத்திரம் 81பேர், உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் இதுவரை 109பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் மூன்று பேர், 10 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். நான்கு பேர், 31 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்.
மேலும் இறந்தவர்களில் 41 முதல் 50 வயதுக்குட்பட்ட 16 பேரும், 51 முதல் 60 வயதுக்குட்பட்ட 21 பேரும், 61 முதல் 70 வயதுக்குட்பட்டவர்களும் அடங்குவர்.
கொரோனா வைரஸ் தொற்றினால் 71 வயதுக்கு உட்பட்ட 45 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்தவகையில் மொத்தம் 109 இறப்புகளில் 81 பேர் கொழும்பு மாவட்டத்திலிருந்தும், இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் கம்பஹா மாவட்டத்தில் (13பேர்) பதிவாகியுள்ளன.
களுத்துறையில் 6 பேர், குருநாகலில் 4 பேர், புத்தளத்தில் 3 பேர் மற்றும் நுவரெலியாவில் ஒருவர் மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் என இதுவரை இறப்புகள் பதிவாகியுள்ளன.