கொரோனா வைரஸ் தாக்கம்: 6 மாதங்களுக்கு முடக்க தயராகும் பிரிட்டன்
கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமாக பரவிவரும் நிலையில் பிரித்தானியாவை 06 மாதங்கள் முடக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் பிரித்தானியாவையும் விட்டுவைக்கவில்லை அங்கு இதுவரை 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நாட்டில் கொரோனா வைரஸினால் நிலைமைகள் மேலும் மோசமடையலாம் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பிரித்தானியாவில் இதுவரை 41,903 கொரோனா வைரஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 4,313 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.