கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் மூன்று வாரங்களுக்குள் குறையும் – ஈரான் ஜனாதிபதி
கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் மூன்றுவாரங்களுக்கு மட்டுமே என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹானி தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று (சனிக்கிழமை) தொலைக்காட்சி நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், பொருளாதார உற்பத்தியை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு தேவையான அனைத்தையும் செய்ய வேண்டும் என கூறினார்.
மேலும் “எதிர் புரட்சியாளர்கள்” பொருளாதார உற்பத்தியை நிறுத்த சதி செய்கிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
சீனாவிற்கு வெளியே தொற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஈரான் ஒன்றாகும், இதுவரை 1,400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் கிட்டத்தட்ட 20,0000 பேர் நோய்த்தொற்றுக்கு உள்ளாக்கியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.