கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து துக்கத்தினம் அனுஷ்டிப்பு
ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து, 10 நாட்களுக்கு துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை அந்நாட்டு அரச பேச்சாளர் மரியா ஜேசுஸ் மொன்டெரோ தெரிவித்துள்ளார்.
குறித்த துக்கதின நேரத்தில் நாடு முழுவதிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என மரியா ஜேசுஸ் மொன்டெரோ கூறியுள்ளார்.
இந்தத் துக்க தின அனுஷ்டிப்புகள் ஸ்பெயின் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ நிகழ்வுடன் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினால் ஸ்பெயினில் 26 ஆயிரத்து 834 பேர் உயிரிழந்துள்ளதோடு, 2 இலட்சத்து 35 ஆயிரத்து 400 பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...