கொரோனா : பிரான்சில் தொடர்ந்தும் உச்சக்கட்ட பரவலில் தொற்று!
கொரோனா வைரஸ் பிரான்சில் தொடர்ந்தும் வீரியமாக பரவி வருகின்றது. நேற்று செப்.25 ஆம் திகதி பதிவான தொற்று விபரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 15,797 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்று வீதம் 6.5% ஆக இருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் அது 6.9% ஆக உயர்வடைந்துள்ளது. அதேவேளை, 56 பேர் நேற்று சாவடைந்திருந்தனர். இதனால் மொத்த சாவு எண்ணிக்கை 31,661 ஆக உயர்வடைந்துள்ளது. சிகிச்சைகளுக்காக 6,128 பேர் தற்போது மருத்துவனனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1,098 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 7 நாட்களில் 4,069 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...