கொரோனா பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் – மோடி
கொரோனா பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் எனவும், அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராட வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், பல நாடுகள் கொரோனா தொற்றின் நான்காவது அலையில் இருக்கும்போது இந்தியா அதனை இரண்டாவது அலையிலேயே கட்டுப்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
முதல் 10கோடி தடுப்பூசிகள் போடுவதற்கு 85 நாட்கள் எடுத்த நிலையில், கடைசி 10 கோடி தட்டுப்பூசிகள் 24 நாட்களில் போடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தினசரி மாநில அரசுகளின் கையிருப்பாக ஒன்றரை கோடி தடுப்பூசிகள் இருப்பதை புள்ளி விபரங்கள் காட்டுவதாக தெரிவித்த மோடி, தடுப்பூசி இயக்கத்தை முறையாக செயல்படுத்தவும் மாவட்ட வாரியாக அதன் பயன்பாட்டிற்கு திட்டமிடுமாறும் கேட்டுக்கொண்டார்.
பகிரவும்...