Main Menu

கொரோனா தாக்கத்தால் நாடுகள் அதிக சுயநலமாக மாறும் – ஜெய்சங்கர்

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தால் நாடுகள் அதிக சுயநலமாக மாறும் என வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தனியார் நிகழ்வொன்றில் காணொளி காட்சி வாயிலாக கருத்து தெரிவித்த அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  கொரோனாவிற்கு பிந்தைய உலகில் தேசியவாதம்  ஆதிக்கம் செலுத்தும் அம்சமாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சீன விவகாரம் குறித்து பதிலளித்த ஜெய்சங்கர், அமைதியும், சமாதானமுமே அண்டை நாட்டுடனான உறவிற்கு அடிப்படையாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், சுயசார்பு என்பது தேசிய திறன்களை வளர்ப்பதற்கான ஒரு கொள்கை முயற்சி எனவும், இந்தியாவை உலகிற்கு விரோதமாக்குவதற்கானது அல்ல என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

பகிரவும்...
0Shares