கொரோனா – கட்டுப்படுத்த முடியாமல் திணறும் நாடுகள்!
கொரோனா வைரஸ் காரணமாக இத்தாலியில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 650 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதன்காரணமாக கடந்த ஒருவாரத்திற்குள் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பால் அங்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் ஐரோப்பிய நாடான இத்தாலி கொரோனாவின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது.
அங்கு சுமார் 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் புதிதாக 5 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே அங்கு 5 ஆயிரத்து 500 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 650 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளமையானது உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இத்தாலிக்கு அடுத்தபடியாக மற்றெரரு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் ஏற்கனவே ஆயிரத்து 700 இற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால் உயிரிழந்திருந்த நிலையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 375 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்பெயினில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாத்திரமை் 375 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த எண்ணிக்கையின்மூலம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ஈரானைப் பின்னுக்குத் தள்ளி ஸ்பெயின் 3-வது இடத்தில் உள்ளது.
இந்த நாடுகளைத் தொடர்ந்து நேற்று ஒரே நாளில் ஈரானில் 129 பேரும், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் தலா 112 பேரும் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, உலகம் முழுவதும் இதுவரையில் மொத்தமாக 14, ஆயிரத்து 703 பேர் உயிரிழந்துள்ளனர்.