Main Menu

கொரோனா இன்னமும் முழுமையாக அழிந்து விடவில்லை – மோடி

கொரோனா இன்னமும் முழுமையாக அழிந்துவிடவில்லை என்பதை மக்கள் உணர வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை)  நாட்டு மக்களிடம் விசேட உரையாற்றினார். இதன்போதே அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், பொது முடக்கம் முடிவுக்கு வந்தாலும் கொரோனா வைரஸ் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் ஊரடங்கு காலம் முடிந்து பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது எனவும்  குறிப்பிட்டார்.

உலகளவில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் இறப்பு விகிதம் மிகக்குறைவாக உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், நாட்டில் 90 இலட்சம் படுக்கைகள் தயாராக இருப்பதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

அத்தோடு, கொரோனா போய்விட்டது என பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் இந்தியப் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

அமெரிக்கா, பிரேசில் நாட்டில் பாதிப்பு இன்னும் அதிகரித்துக் கொண்டு இருப்பதாகவும் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அதிகமான பரிசோதனையினாலேயே நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியுமாக இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

அதேநேரம், மனிதனைக் காப்பாற்ற உலக அளவில் போர் போன்ற கடும் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் தடுப்பு மருந்து கண்டுபிடிப்புப் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

பகிரவும்...
0Shares