கொரோனா அதிகரிப்பு : மோடி தலைமையில் ஆலோசனை
இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அவசர ஆலோசனையை நடத்தவுள்ளார்.
கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், பாதுகாப்பு பணிகள் எந்தளவில் உள்ளது என்பது குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அளவில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கலாமா என்பது குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.