கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடிப்பவர்களுக்கு அங்கீகாரம் – அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிப்பவர்கள் மக்கள் நல்வாழ்வுத் துறையை அணுகி பரிசோதனை மூலமாக நிரூபித்தால் உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் இன்று கொரோனா வைரஸ் குறித்த சர்வதேச கருத்தரங்கத்தில் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என கூறினார்.
மேலும் கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் சிறப்பு சிகிச்சை பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.
மேலும், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாகக் கூறுவோர் மக்கள் நல்வாழ்வுத் துறையை அணுகி பரிசோதனை மூலமாக நிரூபித்தால் உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என தெரிவித்தார்.