கொரோனாவுக்கு இந்தியாவில் 2 தடுப்பு மருந்துகள்: எலிக்கு செலுத்தி சோதனை வெற்றி
இந்தியாவில் ஆய்வில் உள்ள இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகள் எலி உள்ளிட்ட விலங்குகளுக்கு செலுத்தி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவுக்கு 2 தடுப்பு மருந்துகள் தற்போது ஆய்வில் உள்ளன. இது முழுக்க முழுக்க இந்தியாவின் முயற்சியில் நடைபெறுகிறது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், ஐ.சி.எம்.ஆர். மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது.
கோவாக்ஸின் என்ற பெயரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தத் தடுப்பு மருந்து கொரோனாவுக்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல்தடுப்பு மருந்து என்பது குறிப்பிடத்தகக்து.
பகிரவும்...