கொரோனாவின் அதிதீவிரப் பரவல்: பிரதமர் மோடி நாளை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை!
கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிப்படைந்துள்ள மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்தியா முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது.
இதனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க முடியாமல் மருத்துவமனைகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளன.
இந்நிலையில், கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டதில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தல், ஒக்சிசன் பற்றாக்குறை மற்றும் மருத்துவ வசதிகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.