கொரோனாவால் பாதிக்கப் பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இன்று (செவ்வாய்க்கிழமை) காலை உயிரிழந்துள்ளார்.
வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தனது 65 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.