கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்தல் – சர்வதேச மன்னிப்புச் சபை

கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும்போது மத சிறுபான்மையினரின் உரிமைகளை அரசாங்கம் மதிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொரோனா வைரஸினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதற்கு முஸ்லிம் சமூகம் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையிலேயே மன்னிப்புச்சபை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை அரசாங்கம் பின்பற்றவேண்டும் எனவும் அந்த சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.