கொண்டாட்டங்கள் நடைபெற்ற இராணுவ தளம் மீது தாக்குதல் – ஆயுதப்படை உறுப்பினர் உயிரிழப்பு!

தென்கிழக்கு ஈரானில் உள்ள ஒரு இராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடத்தியதில் அந்நாட்டு புரட்சிகர ஆயுதப்படை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இஸ்லாமிய புரட்சியின் 40 வது ஆண்டு நிகழ்வின் உத்தியோகபூர்வ கொண்டாட்டங்கள் நடைபெறுகின்ற நிலையில் இன்று (சனிக்கிழமை) இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் ஆயுதப்படை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மாகாண துணை ஆளுநர் மொஹமட் ஹடி மராஷி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தாக்குதலுக்கு சுனி போராளி குழுவான ஜெய்ஷ் அல்-அடல் பொறுப்பேற்றுள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !