கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் சகோதரர் உள்ளிட்ட மூவர் கைது
கொச்சிக்கடை – புனித அந்தோனியார் தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரி அலாவுதீன் அஹமத் முவாத்தின் சகோதரர் உள்ளிட்ட 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம், நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
கொழும்பு – கோட்டை பிரதான நீதவான் லங்கா ஜயவர்தன முன்னிலையில் இன்று விளக்கமளித்த அந்த திணைக்களம், கைது செய்யப்பட்டுள்ளவர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதிக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்கமைய சந்தேக நபர்களை இந்த மாதம் 23 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் கொழும்பை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.