கொங்கனி பாரம்பரிய முறையில் ரன்வீர் சிங் – தீபிகா படுகோனே திருமணம்…

பொலிவூட்  நட்சத்திரங்களான தீபிகா படுகோனே  – ரன்வீர் சிங் திருமணம் இத்தாலியின் லேக் கோமோ நகரில், கொங்கனி பிராமண பாரம்பரிய முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது.

பொலிவூட்டில் முன்னணி நடிகர்களான தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த அக்டோபர் 21ம் திகதி ரன்வீர் சிங்கை, திருமணம் செய்யப்போவதாக, திருமண அழைப்பிதழுடன் ட்விட்டரில் அறிவித்தார் தீபிகா.

அதை தொடர்ந்து, இரண்டாவது நாளாக வட இந்திய முறைப்படி தீபிகா-ரன்வீர் திருமணம் இன்று நடைபெற்றது. இதில் ரன்வீர் சிங் சார்ந்துள்ள குடும்பத்தாரின் பாரம்பரிய வழக்கங்கள் இடம்பெற்றது. மேலும், இரவில் விருந்து நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டன.

இத்தாலியில் திருமணம் முடிந்து 2 நாட்கள் கழித்து இந்தியா திரும்பும் ரன்வீர்-தீபிகா தம்பதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி எதிர்வரும் நவம்பர் மாதம் 21ம் திகதி பெங்களூரிலும், நவம்பர் 28ம் திகதி மும்பையிலும் நடைபெறவுள்ளது. இதற்கு திரையுலக மற்றும் விளையாட்டு பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ரன்வீர் – தீபிகா திருமணத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் கசியக் கூடாது என்பதற்காக, முன்கூட்டியே பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதனால் இவர்களது திருமண நிகழ்வை புகைப்படத்தில் கூட காண முடியவில்லை என ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

இந்நிலையில், இத்தாலியின் உள்ள பிரபல லேக் கோமா நகரில் தீபிகா படுகோனே – ரன்வீர் சிங் திருமணம் எளிமையாக நடந்து முடிந்தது. நடிகை தீபிகா குடும்பத்தினரின் கொங்கனி பிரமாண பாரம்பரிய முறைப்படி இந்த திருமணம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்னிந்திய கலாச்சார முறைப்படி காலை 7 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் தீபிகா கழுத்தில் ரன்வீர் தாலி கட்டினார். இதில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர். தீபிகா-ரன்வீர் திருமணத்தில் மொத்தம் 40 விருந்தினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

 


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !