கைது செய்யப் பட்டவர்களை விடுவிக்கவும்! – காவிரி உரிமை மீட்புக் குழு

காவிரி உரிமை மீட்பு போராட்டத்தில் போது கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டுமென்று, காவிரி உரிமை மீட்பு குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலமே மேற்படி கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், காவிரி விவகாரத்திற்காக போராடிய ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அதில் பலர் இதுவரை விடுவிக்கப்படவில்லை. எனவே உரிமைக்காக போராடியவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இதன்போது, பொலிஸாரின் தடையை மீறி போராடினார்கள் என்ற குற்றச்சாட்டில் போராட்டக்காரர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை சென்னையில் இடம்பெற்று முடிந்துள்ள ராணுவக்கண்காட்சியை ஆரம்பித்து வைப்பதற்காக, தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிராகவும் கருப்புகொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இப்போராட்டத்திலும் பலர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், இதுவரையில் விடுவிக்கப்படாத பலர் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !