கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் – பிந்திக் கிடைத்த மேலதிக தகவல்கள்.

கைதுசெய்யப்பட்ட இரு பயங்கரவாதிகளிடம் இருந்தும் 3 கிலோ TATP (மலைகளை வெடிக்க வைக்க பயன்படுத்தப்படும் மருந்து) வெடிபொருட்கள், இயந்திர துப்பாக்கிகள், கிரைனைட் குண்டுகள் என பல ஆபத்தான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
மார்செய்யின் 3 ஆம் வட்டாரத்தில் உள்ள மாணவர்களுக்கு வாடகைக்கு விடப்படும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடு வாடகைக்கு எடுத்துள்ளனர். கடந்த ஏப்ரல் 1 ஆம் திகதியில் இருந்து இந்த வீட்டில் வசித்துள்ளனர். வீட்டை RAiD படையிமர் சோதனையிட்டதில், பிஸ்ட்டல் ரக இரு துப்பாக்கிகள், இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளின் கருப்பு கொடி, மூன்று கிலோ TATP வெடிமருந்து, கிரைனைட் குண்டுகள் மற்றும் இயந்திர துபாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளதாக, அர வழக்கறிஞர் François Molins தெரிவித்துள்ளார். தவிர பயங்கரவாதிகள் தங்கியிருந்த வீட்டின் சுவற்றில் மார்செய் நகரத்தின் வரைபடம் பெரிய அளவில் மாட்டப்பட்டிருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.
தவிர, வரைபடத்தின் பல வண்ண பிரதிகளும், பல பயங்கரவாத தாக்குதல்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும், யுத்தகால புகைப்படங்கள், குழந்தைகள் இறந்து கிடப்பது போன்ற புகைப்படங்கள் போன்றனவும், ஜனாதிபதி வேட்பாளர்கள் சிலரின் புகைப்படங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த இரு பயங்கரவாதிகளும் கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து காவல்துறையினரின் S வலையமைப்பின் கீழ் தீவிர கண்காணிப்பில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !