கைதிகள் விடயம் அரசியல் ரீதியிலான பிரச்சினை என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

தமிழ் அரசியல் கைதிகள் விடயம் அரசியல் ரீதியிலான பிரச்சினை என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தலைமையில் இன்று(வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பிலான விவாதத்தினை பேரம் பேசுவதற்கான ஒரு வாய்ப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !