கேலிச் சித்திரத்தின் நாயகன் !!! (சிரித்திரன் சுந்தர்) நினைவுக்கவி

கலை இலக்கிய வானில் சிறகடித்து
விலை மதிக்க முடியா சித்திரங்களைத் தந்து
புன்னகை சிந்த புது மிடுக்கோடு
சிந்தனைக்கோடு நெற்றியிலே ஒளிர
சிரித்திரனில் கேலிச்சித்திரம் மிளிர
பட்டையைக் கிளப்பினாரே சித்திரத்தின் நாயகன் !

சித்திரமே தெய்வமாய் சிரிப்பே காவியமாய்
சிரிப்போடு சிந்தனையை ஊட்டி
சிந்தனைச் சிறப்புக்களை கருவூலங்களாக்கி
சீர்திருத்தங்களை வண்ணச் சித்திரங்களாக்கி
தூரிகையாலே போட்டாரே கலைக்கோலம்
சிரித்திரனின் ஆசான் சுந்தர் !

அறுபதுகளில் தொடங்கிய கலைப்பயணம்
தினகரன்,வீரகேசரி,மித்திரன் எனத் தொடங்கி
சிரித்திரனில் முத்திரை பதித்ததே ஓவியமாய்
ஆண்டுகள் முப்பத்திரெண்டைக் கடந்தபோது
பங்குனித் திங்கள் மூன்றிலே வந்தானே காலனும்
பிறந்தநாளிலேயே கவர்ந்தும் சென்றானே !

  • ரஜனி அன்ரன் (B.A) 03.03.2019

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !