கேரள முதல்வரின் கொடும்பாவி எரிப்பு – தமிழிசை மீது வழக்குப்பதிவு

கேரள முதல்வர் பினராயி விஜயனின் கொடும்பாவியை போராட்டத்தின் போது எரித்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை மீது 3 பிரிவின் கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அத்தோடு இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் பக்தன், விசுவ இந்து பரிசத் மாநில செயலாளர் ராமன், பா.ஜ.க. கோட்ட பொறுப்பாளர் பாஸ்கர், தேசிய பொதுக்குழு உறுப்பினர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியன், மாவட்ட தலைவர்கள் மோகனராஜா, பாஸ்கர் உள்ளிட்டோர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 2 பெண்கள் சுவாமி தரிசனம் செய்ததற்கு கடும் எதிர்ப்பு வலுத்துள்ளது. பாரதிய ஜனதா மற்றும் இந்து இயக்க பொறுப்பாளர்கள் கேரள அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் சென்னை பல்லாவரத்தில் சபரிமலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் அதன் தலைவர் துரைசங்கர் தலைமையில் போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் 100ற்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த போராட்டத்தின்போது கேரள முதல்வர் பினராயி விஜயனின் கொடும்பாவி தீ வைத்து கொளுத்தப்பட்டது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !