கேரளாவில் வரலாறு காணாத மழை: 7 இலட்சம் மக்கள் முகாம்களில் தஞ்சம்

கேரளாவில் பெய்த கடும் மழையை தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்ததினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் இதுவரை சுமார் 7 இலட்சத்து 25 ஆயிரம் பேர் 5 ஆயிரத்து 645 நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளதாக மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 360க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கேரளாவில் கடந்த எட்டாம் திகதி முதல் பெய்துவரும் கடும் மழையினால் அங்கு பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செங்கநல்லூரில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.  இதையடுத்து பம்பா ஆற்றின் கரையோரத்தில் சுமார் 5 ஆயிரம் பேர்வரை சிக்கி தவிப்பதாக மீட்பு படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் கடந்த 8 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிவரை வழமையைவிட 250 மடங்கு அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !