கேரளாவில் போராட்டம் – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கேரளாவில் 2ஆவது நாளாக இன்றும் (புதன்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தால் கன்னியாகுமரி மாவட்டம் களியாக்காவிளையிலிருந்து கேரளாவுக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

மேலும், கேரளாவிலிருந்து கன்னியாகுமரிக்கும் பேருந்துகள் இயக்கப்படவில்லை.  இதன்காரணமாக மக்களின் இயல்பவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் நலச்சட்டங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் அகில இந்திய பொது வேலைநிறுத்தம், முழு அடைப்பு போராட்டத்தை நேற்று ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !