கேரளாவில் நூறாண்டு காணாத வெள்ளத்தால் அதிகமான உயிர்பலி – ஐ.நா. சபை வேதனை

கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. இன்று மட்டும் 22 பேர் பலியாகியுள்ள நிலையில் மழை பாதிப்பால் இதுவரை 346 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட உயிர் சேதங்களுக்கு ஐ.நா.சபை பொதுச் செயலாளர் அன்ட்டோனியோ குட்டெரஸ் கவலை தெரிவித்துள்ளார்.
இந்த பெருவெள்ளத்தினால் ஏற்பட்ட பேரிழப்பு, உயிர்பலி மற்றும் மக்களின் இடப்பெயர்வு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை வேதனை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியை இந்தியா கோரியுள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அன்ட்டோனியோ குட்டெரஸ்-ன் செய்தி தொடபாளர் ஸ்டெஃபானே டுஜாரிக், ‘இயற்கை பேரிடர்களை கையாள இந்தியாவிடம் போதுமான வசதிகள் உள்ளன.

அதனால், எங்களிடம் எந்த உதவியும்  கோரப்படவில்லை. ஆனால், இந்தியாவில் உள்ள எங்களது குழுவினர் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர்’ என தெரிவித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !