கேம்பினோ மாபியா கும்பலின் தலைவர் பிரான்ஸிஸ்கோ கொல்லப்பட்டார்

குற்றம் சாட்டப்பட்டிருந்த அமெரிக்காவின் கேம்பினோ மாபியா கும்பலின் தலைவன் பிரான்ஸிஸ்கோ கேலி, அவரது வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன் தினம் (புதன்கிழமை) மாலை, ஸ்டேடன் தீவில் உள்ள கேலியின் வீட்டில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது என NYPD இன் துப்பறிவாளர் டெர்மோர்ட் சீ நேற்று தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் அவரது வீட்டு வாசலில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி கிடந்த நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. விரைந்து வைத்தியசாலைக்கு அழைத்து  செல்லப்பட்ட போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். கொலை தொடர்பான விசாரணைகள் முன்னெடுத்து வரப்படுகிறது என பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

“வெளிப்படையான மனிதர்” என அழைக்கப்படும் 53 வயதான கேலி கடந்த 2015ம் ஆண்டு முதல் அமெரிக்கா மற்றும் இத்தாலியில் கேம்பினோ  மாபியா கும்பலை வழி நடத்தி வந்துள்ளதாக தெரிவிக்கிப்படுகின்றது.

நியூயோர்க்கின் முக்கியமான 5 மாபியா குடும்பங்களில் கேம்பினோவும் ஒன்று. ஜெனோவெசஸ், லச்சஸஸ், கொலம்பஸ், போனானோஸ் ஆகியவை மற்ற மாபியா குடும்பங்கள் ஆகும். கடந்த 34 வருடங்களில் மாபியா தலைவன் ஒருவன் கொடூரமாக கொல்லப்பட்டது இதுவே முதன்முறையாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேம்பினோ குழு,  கொலை, போதைப்பொருள் விநியோகம் போன்ற பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !