கென்யாவில் பேருந்து விபத்தில் 50 பேர் பலி

கென்யாவில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் கென்யாவின் தலைநகர் நைரோபியில் இருந்து மேற்கு பகுதியில் உள்ள காகமேகா நோக்கி 52 பேருடன் சென்ற பேருந்து வீதியின் அருகேயுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளதுடன் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டுள்ளனர். ஒவ்வொரு சருடமும் கென்யாவில் வீதி விபத்துகளில் 3 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர் எனவும் இந்த எண்ணிக்கை தற்போது 12 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !