கூட்டு எதிர்கட்சியினர் நாடாளுமன்றத்தின் விதிகளை மீறுவதாக அரசாங்கம் குற்றச்சாட்டு!

கூட்டு எதிர்கட்சியினர் நாடாளுமன்றத்தின் விதிகளை மீறும் வகையில் செயற்பட்டு வருவதாக சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிப் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைபிற்கே வழங்கப்பட வேண்டும் என சபாநாயகர் இன்று(வெள்ளிக்கிழமை) காலை அறிவித்ததையடுத்து, கூட்டு எதிர்கட்யினரை் சபையில் கூச்சலிட்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இந்தநிலையில் இதுதொடர்பில் சபையில் கருத்து வெளியிடும் போதே சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

சபாநாயகரின் முடிவு மீது எவரும் விவாதம் நடத்த முடியாது. இவர்கள் நாடாளுமன்ற விதிமுறைகளை மீறுகின்றனர். இவர்களுக்கு எதிர்க்கட்சி பதவி வேண்டும் என்றால் முதலில் அரசாங்கத்தை விட்டு வெளியேறி சுயாதீனமாக எதிரணியில் அமர வேண்டும்.

அவ்வாறு நீங்கள் சுயாதீனமாக அமருங்கள் அதன் பின்னர் உங்களுக்கு எதிர்க்கட்சி பதவி வழங்குவது குறித்து விவாதிக்கலாம்“ என தெரிவித்துள்ளார்.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !