கூட்டமைப்பு – தமிழர் முற்போக்கு கூட்டணி இணைந்து செயற்பட முடிவு
தமிழ் மக்கள் தற்போது எதிர்கொள்ளும் புதிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விடயத்தில், இணைந்து செயற்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் முடிவு செய்துள்ளன.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று இரண்டு கட்சிகளும் சந்தித்து, இது தொடர்பாக கலந்துரையாடியதாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் இஸ்லாமிய தீவிரவாத எழுச்சிக்குப் பின்னர் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் இணைந்து செயற்படுவதென இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யபபட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த பேச்சுக்கள் ஆக்கபூர்வமானவையாக இருந்தன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.