கூட்டமைப்பு குறுகிய நோக்கங்களுக்காகவே அரசாங்கத்தின் பங்காளியாக செயற்படுகின்றது – மஹிந்த அணி

தமிழ் தேசிய கூட்டமைப்பு குறுகிய நோக்கங்களுக்கு மாத்திரமே அரசாங்கத்தின் பங்காளியாக செயற்படுகின்றது என பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அந்த கட்சியின் தவிசாளரான பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘புதிய அரசியலமைப்பு உருவாகாவிடின் மீண்டும் யுத்த சூழல் ஏற்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அரசாங்கத்திற்கு எச்சரித்தமையினை தொடர்ந்தே புதிய அரசியலமைப்பு தொடர்பிலான அறிக்கை இம்மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இல்லாவிடின் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்க மாட்டோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் குறிப்பிடுவதன் உள்நோக்கம் மாறுப்பட்டதாகவே காணப்படுகின்றது’ என தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !