முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு சிறை!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.பியசேனவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த பின்னரும் ஒரு வருடத்திற்கு அரசாங்க வாகனத்தை பயன்படுத்தினார் என குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை இன்று (திங்கட்கிழமை) நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோதே அவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டமையால் 4 வருட சிறைத்தண்டனையும் 5.4 மில்லியன் ரூபாய் அபராதமும் விதித்து நீதவான் உத்தரவிட்டார்.