கூட்டணிக்கு யார் வந்தாலும் அரவணைப்போம்- கமல்ஹாசன் பேட்டி

தமிழகத்தில் அகற்றப்பட வேண்டிய அதிமுக, திமுக, பற்றி பேசாமல் இருக்க முடியாது. அகற்றப்பட வேண்டியவர்கள் இருவரும்தான் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.சென்னை:
சென்னை ஆழ்வார்பேட்டையில் கமல்ஹாசன் , ரவிபச்சமுத்து, சரத்குமார் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் பேசியதாவது,
நடிகர் சரத்குமார் பேசும்போது, எங்கள் கூட்டணிக்கு முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன் தான் என கூறினார்.
மேலும் எங்கள் கூட்டணி தமிழகத்திற்கு விடிவெள்ளியாக இருக்கும். மக்கள் நீதி மய்யம் , ஐஜேகே , சமக, கூட்டணிதான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். தமிழக எதிர்காலம், மக்களின் நலனுக்காக இந்த கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து பேசினார்.
நடிகை ராதிகா கூறும்போது, எங்களது கூட்டணி கண்டிப்பாக வெற்றி கூட்டணியாக அமையும் என்றார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசும்போது, எங்கள் கூட்டணிக்கு யார் வந்தாலும் அரவணைப்போம். தமிழகத்தில் அகற்றப்பட வேண்டிய அதிமுக, திமுக, பற்றி பேசாமல் இருக்க முடியாது. அகற்றப்பட வேண்டியவர்கள் இருவரும்தான். ஸ்டாலின் உள்பட எல்லோர் மீதும் விமர்சனங்களை முன்வைப்பேன். இனி நான் அடிக்கிற ஆள் எல்லாம் எதிரிதான் என்றார்.