கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையின் புதிய தொழில்நுட்பம் ”Google lens” அறிமுகம்!

ஸ்நாப்சாட் போன்ற பல்வேறு செயலிகளில் புகைப்படங்களின் மேல் டிஜிட்டல் பூ பொருத்தும் வசதி சில காலமாக நம் பயன்பாட்டில் இருந்து வருகிறது. அந்த வகையில் கூகுளின் புதிய வசதி நிஜ பூக்களின் மேல் டிஜிட்டல் தரவுகளை உடனடியாக வழங்குகிறது.
கூகுளின் வருடாந்தர டெவலப்பர் நிகழ்வில் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை கூகுள் லென்ஸ் எனும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தார்.
அந்த வகையில் கூகுள் லென்ஸ் கொண்டு உங்களது போனின் கேமராவை பயன்படுத்தி தகவல்களை தேடி தெரிந்து கொள்ள முடியும். நீங்கள் ஏதேனும் இடத்தில் அழகிய பூ ஒன்றை பார்த்தால், அதன் பெயர் மற்றும் தகவல்களை அறிந்து கொள்ள பூவின் மேல் உங்களது ஸ்மார்ட்போன் கேமராவை காண்பிக்க வேண்டும்.
இதே போல் உணவகத்தின் பெயர் பலகையில் கேமராவை காண்பித்தால், குறிப்பிட்ட உணவகத்திற்கு ஏற்கனவே சென்றவர்கள் வழங்கிய விமர்சனங்களை அறிந்து கொள்ள முடியும். இதனால் மக்களிடம் நல்ல விமர்சனம் பெற்ற உணவகத்தை கூகுள் லென்ஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
முதற்கட்டமாக கூகுள் லென்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் கூகுள் போட்டோஸ் செயலியில் வழங்கப்படும். இந்த ஆண்டின் இறுதிக்குள் கூகுள் லென்ஸ் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பயன்பாட்டில் இல்லாத மிகப்பெரிய திட்டத்தை கூகுள் லென்ஸ் துவங்கியுள்ளது.

போட்டோ மட்டும் போதும்: சிலிர்க்க வைக்கும் கூகுள் லென்ஸ்(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !