குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பெற்றுக் கொடுக்கும் பெண்!

குழந்தை பெற முடியாதவர்களுக்கு 10 மாதம் குழந்தையை சுமந்து 16 மணி நேரம் பிரசவ வலியை அனுபவித்து இலவசமாக குழந்தை பெற்றெடுத்து கொடுக்கிறார் ஒரு கனேடியப் பெண்மணி.

கனடாவைச் சேர்ந்த மரிசா என்ற பெண்ணே இவ்வாறு குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு உதவி வருகிறார்.

இவ்வாறு, ஸ்பெயினைச் சேர்ந்த ஜீசஸ், ஜூலியோ என்ற தம்பதிக்கு குழந்தை பாக்கியம் இல்லாத நிலையில் தற்பொது குழந்தை பெற்றுக்கொடுத்துள்ளார் மரிசா.

அந்தக் குழந்தைக்கு “மலேனா” என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. 4.17 கிலோ எடையுடன் நலமாக உள்ள மலேனா தன் தாய் தந்தையுடன் தற்போது ஸ்பெயின் செல்லவுள்ளார்.

இதுகுறித்து மரிசா கூறும்போது, “நான் இவர்களுக்கு ஒரு குழந்தையை மட்டும் உருவாக்கவில்லை. நான் ஒரு பாரம்பரியத்தையே  உருவாக்குகிறேன்.

குழந்தையை பிறருக்கு கொடுக்கிறாயா என பலரும் என்னிடம் கேட்கிறார்கள். ஆனால் நான் ஒரு குழந்தையின் பிறப்புவரை காவல் இருப்பது போலவே உணர்கிறேன்.

கனடாவில் பணம் வாங்கும் வாடகைத் தாய் முறை சட்டவிரோதமானது. அமெரிக்காவில் வாடகை தாய் கருவை சுமக்க 60,000 – 1,20 ,000 டொலர் பணம் பெறுவார்கள்.

கனடாவில் நாங்கள் அப்படி செய்யவில்லை. நான் ஒன்றும் குழந்தை பெறும் இயந்திரம் இல்லையே” என்கிறார் புன்னகைத்தபடி.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !